சுடச்சுட

  

  31-ம் தேதிக்குள் விதிமுறையில் மாற்றம் கொண்டு வராவிட்டால் அங்கீகாரம் ரத்து

  By dn  |   Published on : 12th January 2013 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் விளையாட்டு வழிகாட்டு நெறிமுறைப்படி தேசிய விளையாட்டு அமைப்புகள் தங்களின் விதிமுறையில் வரும் 31-க்குள் மாற்றம் கொண்டு வராவிட்டால் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

  இது தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கும் மத்திய விளையாட்டு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை செயலர் பி.கே.தேவ் கூறியது:

  மத்திய அரசின் விளையாட்டு வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டுள்ளபடி விளையாட்டு சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது மற்றும் பதவிக்காலம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

  இந்தப் பணிகளை விரைந்து மேற்கொள்வதோடு, விதிமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான செயல்திட்டத்தை அடுத்த பொதுக் குழு கூட்டத்திலேயே கொண்டு வரவேண்டும். இது தொடர்பாக வரும் 31-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.

  விதிமுறையில் திருத்தம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டு, அதை செயல்படுத்தாமல் இருந்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

  இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மீண்டும் அங்கீகாரம் பெறுவதற்காக தங்களுடைய விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது பற்றி பேசிய தேவ், "இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சட்டத் திருத்தம் தொடர்பான வரைவு நகலை எங்களுக்கு அனுப்பி வைக்கும் என்று நம்புகிறோம்.

  அப்படி அனுப்பும்பட்சத்தில் விளையாட்டு வழிகாட்டு நெறிமுறைப்படி விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதா என்பதைப் பார்ப்போம்.

  இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் தற்போது அங்கீகாரத்தை இழந்திருப்பதால், அடுத்து வரக்கூடிய சர்வதேசப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அச்சங்கத்தை கேட்டுள்ளோம்' என்றார்.

  மத்திய அரசின் விளையாட்டு வழிகாட்டு நெறிமுறைப்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாட்டு சங்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இதேபோல் ஒருவர் 3 முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai