சுடச்சுட

  

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை.

  இலங்கையின் திரிமன்னே 134 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் எடுத்தார்.

  முதலில் பேட் செய்த ஆஸ்திúலியா 46.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய இலங்கை 40.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  சரிவுக்குள்ளான ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச் 4, பில் ஹியூஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

  இதனால் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது ஆஸ்திரேலியா.இதையடுத்து வந்த பெய்லி 26, ஸ்டீவ் ஸ்மித் 8, டேவிட் ஹசி 29, கிளென் மாக்ஸ்வெல் 8, பென் கட்டிங் 27 ரன்களில் ஆட்டமிழந்தனர். தனி நபராகப் போராடிய பிராட் ஹாடின் 67 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 170 ரன்களில் சுருண்டது.

  இலங்கை வெற்றி: பின்னர் பேட் செய்த இலங்கை அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே தரங்காவின் விக்கெட்டை இழந்தது. 3 பந்துகளைச் சந்தித்த அவர் ரன் ஏதுமின்றி வெளியேறினார். எனினும் திரிமன்னே சதமடித்து இலங்கைக்கு வெற்றி தேடித்தந்தார்.

  5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் வரும் 18-ம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.

  சுருக்கமான ஸ்கோர்

  ஆஸ்திரேலியா-170

  (பிராட் ஹாடின் 50,

  டேவிட் ஹசி 29, மலிங்கா 3வி/32)

  இலங்கை-172/2

  (திரிமன்னே 102*, தில்ஷான் 51,

  பென் கட்டிங் 1வி/42)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai