சுடச்சுட

  

  தென்னிந்திய மகளிர் கபடி: அன்னை தெரசா பல்கலைக்கழகம் சாம்பியன்

  By dn  |   Published on : 13th January 2013 11:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt5

  தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கபடிப் போட்டியில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 2ஆவது இடத்தைப் பிடித்தது.

  பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் அரையிறுதிக்கு கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மங்களூர் பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம் அணிகள் முன்னேறின. லீக் முறையில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மதுரை அணி 35-18 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள பல்கலைக்கழக அணியை வீழ்த்தியது.

  கொடைக்கானல் அணியும், மங்களூர் அணியும் மோதிய பரபரப்பான கடைசி ஆட்டத்தைக் காண கூட்டம் நிரம்பி வழிந்தது. இப்போட்டியில் கொடைக்கானல் அணி 14-11 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

  அரையிறுதி லீக் ஆட்டங்களின் முடிவில் கொடைக்கானல் அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

  மதுரை அணி 4 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும், மங்களூர் அணி 3 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும், கேரள அணி புள்ளிகள் ஏதுமின்றி 4-வது இடத்தையும் பிடித்தன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அகில இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு பொதுச்செயலர் ஆர். கிருஷ்ணகுமார் கொடைக்கானல் அணிக்கு வெற்றிக் கோப்பையை வழங்கினார். அனைத்து வீராங்கனைகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

  விழாவுக்கு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.கே. குமரகுரு தலைமை வகித்தார். வீராங்கனைகளுக்கு நினைவுப் பரிசுகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ். சிவநேசன் வழங்கினார்.

  விழாவில் சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் கே. அங்கமுத்து, திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு அலுவலர் கே. சேவியர் ஜோதி சற்குணம், திருநெல்வேலி மாநகர காவல்துறை உதவி ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்

  கழக விளையாட்டுத் துறை இயக்குநரும், போட்டி அமைப்பாளருமான டி. சண்முகநாதன் உள்ளிட்டோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai