சுடச்சுட

  

  ஹாக்கி இந்தியா லீக் போட்டி தில்லியில் திங்கள்கிழமை தொடங்குகிறது. பிப்ரவரி 10-ம் தேதி நிறைவடைகிறது.

  இப்போட்டியின் தொடக்க விழா தில்லி மேஜர் தயான்சந்த் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் டெல்லி வேவ்ரைடர்ஸ் அணியும், ஜேப்பி பஞ்சாப் வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.

  இப் போட்டியில் மும்பை மேஜிஸியன்ஸ், ராஞ்சி ரினோஸ், உத்தரப் பிரதேசம் விஸôர்ட்ஸ், டெல்லி வேவ்ரைடர்ஸ், ஜேப்பி பஞ்சாப் வாரியர்ஸ் என 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 120 வீரர்கள் இப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். தொடர் நாயகன் விருதை வெல்லும் வீரருக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. ஆட்டநாயகன் விருது வெல்லும் வீரர், சிறந்த கோலடிக்கும் வீரர் ஆகியோருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இதுதவிர பார்வையாளர்களுக்கும் பரிசுத் தொகை காத்திருக்கிறது. 5 ரசிகர்களுக்கு பெனால்டி ஸ்டிரோக் மூலம் கோலடிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். அதில் கோலடிப்பவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai