சுடச்சுட

  

  ஐந்தாவது சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. 23-ம் தேதி நிறைவடைகிறது.

  இது தொடர்பாக போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் கணேசன், உலக செஸ் சம்மேளன துணைத் தலைவர் டி.வி.சுந்தர், தமிழ்நாடு செஸ் சங்க பொதுச் செயலர் முரளி மோகன் உள்ளிட்டோர் கூறியது:

  தமிழ்நாடு செஸ் சங்கம் மற்றும் "ஸ்போர்ட்ஸ் புரமோஷன் பவுண்டேஷன்' சார்பில் நடைபெறும் இப் போட்டியில் இந்தியா, பெலாரஸ், ரஷியா, உஸ்பெகிஸ்தான், சீனா, வங்கதேசம், ஜெர்மனி, ஹங்கேரி, கஜகஸ்தான், அமெரிக்கா, நேபாளம், இஸ்ரேல், ஸ்விட்சர்லாந்து ஆகிய 13 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

  இதில் 11 கிராண்ட் மாஸ்டர்கள், 4 மகளிர் கிராண்ட் மாஸ்டர்கள், 15 இண்டர்நேஷனல் மாஸ்டர்கள், ஒரு மகளிர் இண்டர்நேஷனல் மாஸ்டர் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர் என்றனர். அப்போது போட்டியின் தலைமை நடுவர் பால் ஆரோக்கியராஜ், தமிழ்நாடு செஸ் சங்க துணைத் தலைவர் முருகவேல், துணை பொருளாளர் திருக்காளத்தி உள்ளிட்டோர் உடனிருந்

  தனர். செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. காமன்வெல்த் செஸ் சங்க தலைவரும், அகில இந்திய செஸ் சம்மேளன செயலருமான பாரத் சிங் தொடக்க விழாவுக்கு தலைமை வகிக்கிறார். புரூக் பீல்ட்ஸ் மற்றும் ஸ்பென்சர் பிளாசா இயக்குநர் பாலசுப்பிரமணியம் போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.

  இந்தப் போட்டி 11 சுற்றுகளைக் கொண்டதாகும். மொத்தப் பரிசுத்தொகை ரூ.10 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது.

  இதில் இந்தியாவில் இருந்து கிராண்ட் மாஸ்டர் ஆர்.ஆர். லட்சுமண் பங்கேற்கிறார். பெலாரஸின் அலெக்சாண்ட்ரோவ் அலெக்செஜ் (2607 சர்வதேச ரேட்டிங் புள்ளிகள்) போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்பான்சர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai