சுடச்சுட

  

  ஆஸ்திரேலியன் ஓபன் : 2வது சுற்றுக்கு செரீனா, அஜரென்கா தகுதி

  By dn  |   Published on : 15th January 2013 02:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  serenaC

  ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில், செரினா வில்லியம்ஸ், அஜரென்கா, எலீனா வெஸ்னினா உள்ளிட்டோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுள்ளனர்.

  அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ருமேனியாவின் எடினா கல்லோவிட்சை 6-0, 6-0 என்ற நேர் செட்களில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

  பெலாரஸின் விக்டோரியா அஜரென்கா, ருமேனியாவின் மோனிகா நிகுலெஸ்குவை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்து 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

  ரஷ்யாவின் எலினா வெஸ்னினா, பிரான்சின் கரோலின் கார்சியாவை 3-6, 6-3, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai