சுடச்சுட

  
  spt2

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியின் 3-வது நாளான புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் 2-வது சுற்றில் தரவரிசையில் 551-வது இடத்தில் உள்ள சோம்தேவ் 7-6 (10), 6-3, 1-6, 0-6, 5-7 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள போலந்தின் ஜெர்ஸி ஜேனோவிச்சிடம் தோல்வி கண்டார்.

  4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் அபாரமாக ஆடிய சோம்தேவ் முதல் இரு செட்களையும் கைப்பற்றினார்.

  இதனால் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரிவிலிருந்து மீண்ட ஜெர்ஸி அடுத்த 3 செட்களையும் தொடர்ச்சியாகக் கைப்பற்றி வெற்றி கண்டார்.

  இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற ஒரே இந்திய வீரர் சோம்தேவ் மட்டுமே.

  போபண்ணா-ராஜீவ் ராம் வெற்றி ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ரோஹன் போபண்ணா-அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் தனாஸி-நிக் கிர்கியோஸ் ஜோடியை வீழ்த்தியது. போபண்ணா ஜோடி அடுத்த சுற்றில் இத்தாலியின் சைமன் பொல்லேலி-ஃபேபியோ ஃபோகினி ஜோடியை சந்திக்கிறது.

  மற்றொரு ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி-கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பாப்லோ அன்துஜார்-கில்லர்மோ கிரேஸியா லோபஸ் ஜோடியை வீழ்த்தியது.

  இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி தங்களின் முதல் சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன்-இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிக் ஜோடியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

  சானியா ஜோடி அதிர்ச்சி தோல்வி

  மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் தரவரிசையில் 10-வது இடத்தில் இந்தியாவின் சானியா மிர்சா-அமெரிக்காவின் பெத்தானியே மடேக் சேன்ட்ஸ் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-7 (4), 3-6 என்ற நேர் செட்களில் தரவரிசையில் இல்லாத ஸ்பெயினின் சில்வியா-கார்லா ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

  சமீபத்தில் நடைபெற்ற பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா-மடேக் ஜோடி, சற்றும் எதிர்பாராத வகையில் முதல் சுற்றோடு வெளியேறியுள்ளது. இப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பாப் பிரையனுடன் இணைந்து களமிறங்குகிறார் சானியா.

   

  3-வது சுற்றில் ஜோகோவிச், ஷரபோவா, அக்னீஸ்கா, லீ நா

   

  ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் மரியா ஷரபோவா,போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, சீனாவின் லீ நா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

  புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் நோவக் ஜோகோவிச் 6-1, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ரியான் ஹாரிஸனை தோற்கடித்தார்.

  இதேபோல் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோ, டேவிட் பெரர், ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோ, செர்பியாவின் டிப்சரேவிச், ஆஸ்திரியாவின் ஜூர்கன் மெல்ஸர் ஆகியோரும் தங்களின் 2-வது சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

  அக்னீஸ்கா வெற்றி: மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் இரினா கேமிலியா பெகுவை தோற்கடித்தார். இதன்மூலம் தொடந்து 11-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் அக்னீஸ்கா.

  இதேபோல் சீனாவின் லீ நா 6-2, 7-5 என்ற நேர் செட்களில் பெலாரஸின் ஓல்காவையும், ரஷியாவின் மரியா ஷரபோவா 6-0, 6-0 என்ற நேர் செட்களில் ஜப்பானின் மிசாக்கி டோயையும், செர்பியாவின் அனா இவானோவிச் 7-5, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் யங்-ஜன் சானையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

  சமந்தா ஸ்டோசருக்கு அதிர்ச்சி: தரவரிசையில் 9-வது இடத்தில் இருப்பவரான ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் தனது 2-வது சுற்றில் 4-6, 6-1, 5-7 என்ற செட் கணக்கில் தரவரிசையில் இல்லாத சீனாவின் ஜீ ஜெங்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

   

  கோபமடைந்த ஜெர்ஸி

   

  2-வது சுற்றில் சோம்தேவுடன் விளையாடிய போலந்தின் ஜெர்ஸி ஜெனோவிச், டைபிரேக்கர் செட்டின்போது நடுவரின் தீர்ப்பால் கோபமடைந்தார். அதனால் தனது டென்னிஸ் ராக்கெட்டை (பேட்) நடுவரின் இருக்கையில் அடித்ததோடு, தனது குடிநீர் பாட்டிலையும் மைதானத்துக்கு வெளியில் தூக்கியெறிந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai