சுடச்சுட

  

  நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 193 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

  தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 153.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 525 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

  இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து 44.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு சுருண்டதால் பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து 2-வது இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து 4-வது நாளான திங்கள்கிழமை 211 ரன்களுக்கு சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 193 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா. முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

   

  சுருக்கமான ஸ்கோர்

  தென் ஆப்பிரிக்கா-525

  (டூ பிளெஸ்ஸிஸ் 137, ஆம்லா 110, எல்கர் 103*, பிரெஸ்வெல் 3வி/94, மன்றோ 2வி/40)

  நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸ்-121

  (வாட்லிங் 63, பெளல்ட் 17*, ஸ்டெயின் 5வி/17)

  2-வது இன்னிங்ஸ்-221

  (வாட்லிங் 63, பிரௌன்லி 53, கப்டில் 58, ஸ்டெயின் 3வி/48)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai