சுடச்சுட

  

  பதற்றம் எதிரொலி: 9 பாகிஸ்தான் ஹாக்கி வீரர்களை திருப்பியனுப்ப முடிவு

  By dn  |   Published on : 16th January 2013 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் விளையாட வந்துள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த 9 வீரர்களையும் திருப்பியனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகில் உள்ள பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரை பாகிஸ்தான் ராணுவம் கடந்த 8-ம் தேதி கொன்றது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவசேனை உள்ளிட்ட கட்சிகளும், சில அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் போட்டி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே பாகிஸ்தான் வீரர்களை திருப்பியனுப்ப ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளது.

  இது தொடர்பாக ஹாக்கி இந்தியா அமைப்பின் பொதுச் செயலர் நரீந்தர் பத்ரா கூறுகையில், "தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு அணி உரிமையாளர்கள், ஹாக்கி இந்தியா, பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் ஆகியோருடன் ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த சீசனில் ஏலம் எடுக்கப்பட்ட முழுத் தொகையும் வீரர்களுக்கு வழங்கப்படும். அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களைத் தேர்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

  பாகிஸ்தான் வீரர்களில் அதிகபட்சமாக மெக்மூத் ரஷீத் ரூ.22.32 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.

  கடந்த ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட சிவசேனைத் தொண்டர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியதால் மும்பை அணியின் பயிற்சி ஆட்டம் பாதிப்புக்குள்ளானது.

  இதேபோல் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் தொடக்க விழாவின்போது ஹிந்து யுவக்சபா அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai