சுடச்சுட

  

  மகளிர் உலகக் கோப்பையை நடத்த குஜராத் கிரிக்கெட் சங்கம் மறுப்பு

  By dn  |   Published on : 16th January 2013 11:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த குஜராத் கிரிக்கெட் சங்கம் மறுத்துவிட்டது.

  2013 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 31-ம் தேதி முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.

  இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரை பாகிஸ்தான் ராணுவம் கொன்றது. இதையடுத்து ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் விளையாட வந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவசேனை கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களை திருப்பியனுப்ப ஹாக்கி இந்தியா கூட்டமைப்பு முடிவு செய்தது.

  இந்த நிலையில் ஆமதாபாதில் உலகக் கோப்பை போட்டியை நடத்த முடியுமா என குஜராத் கிரிக்கெட் சங்கத்திடம் பிசிசிஐ கேட்டுள்ளது. ஆனால் அதற்கு குஜராத் கிரிக்கெட் சங்கம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் செயலர் ராஜேஷ் படேல் கூறுகையில், "போட்டியை ஆமதாபாதில் நடத்துமாறு பிசிசிஐ எங்களை அணுகியது. எல்லையில் பதற்றம் நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு போட்டியை நடத்த மறுத்துவிட்டோம். போட்டியை மும்பையில் நடத்துவதா அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதா என்பது குறித்து ஐசிசியும், பிசிசிஐயும்தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai