சுடச்சுட

  
  saina

  மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெவால் முன்னேறியுள்ளார்.

  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் புதன்கிழமை தொடங்கிய இப் போட்டியில் சாய்னா தனது முதல் சுற்றில் 21-12, 21-15 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் கூ ஜுவானை வீழ்த்தினார். சாய்னா தனது 2-வது சுற்றில் ஹாங்காங்கின் பியூ இய்னை சந்திக்கிறார்.

  சிந்து தோல்வி: இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான பி.வி.சிந்து, டென்மார்க்கின் டின் பானிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

  குருசாய் தத் முன்னேற்றம்: ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் குருசாய் சத் 21-11, 21-14 என்ற நேர் செட்களில் சக நாட்டவரான செüரவ் வர்மாவை தோற்கடித்தார்.

  மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-பிரதன்யா காட்ரே ஜோடி 20-22, 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் யூ யான் வனேசா-டெலிஸ் யூலியானா ஜோடியை வீழ்த்தியது.

  இந்தியாவின் மற்றொரு ஜோடியான அபர்ணா பாலன்-சிகி ரெட்டி ஜோடி, இங்கிலாந்தின் ஹெதர் ஆல்வெர்-காடே ராபெர்ட்ஷா ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 21-11, 3-4 என்ற நிலையில் இருந்தபோது போட்டியிலிருந்து விலகியது. இதனால் இங்கிலாந்து ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

  ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ்-அக்ஷய் ஜோடி 12-21, 16-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் அங்கா பிரடமா-ரியான் அகங் ஜோடியிடம் தோல்வி கண்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai