சுடச்சுட

  

  மோகன் பகான் கால்பந்து அணி மீதான 2 ஆண்டு தடையை நீக்கியுள்ளது அகில இந்திய கால்பந்து சங்கம். ரூ.2 கோடி அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

  தடை நீக்கப்பட்டுள்ளதால் தற்போது நடைபெற்று வரும் ஐ-லீக் போட்டியில் மோகன் பகான் அணி விளையாடலாம். ஆனால் அந்த அணி இந்த சீசனில் பெற்றிருந்த 12 புள்ளிகளும் கழிக்கப்பட்டுள்ளன. அதனால் புள்ளிகள் ஏதுமில்லாத நிலையில் அந்த அணி மீண்டும் விளையாடவுள்ளது.

  இந்திய கால்பந்து சங்க தலைவர் பிரஃபுல் படேல் தலைமையில் நடைபெற்ற அகில இந்திய கால்பந்து சங்க செயற்குழு கூட்டத்தின்போது இந்த முடிவெடுக்கப்பட்டது.

  முன்னதாக கடந்த டிசம்பரில் மோகன் பகான்-ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. இதனால் 2-வது பாதி ஆட்டத்தில் விளையாட மறுத்து மோகன் பகான் அணி வெளியேறியது. இதையடுத்து அந்த அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai