சுடச்சுட

    
    viswanathananand

    டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டியில் 4 சுற்றுகளின் முடிவில் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மாக்னஸ் கார்ல்ùஸன், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

    நெதர்லாந்தின் விக் ஆன் ஜீ நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியின் 4-வது சுற்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனை வீழ்த்தியதன் மூலம் முன்னிலை பெற்றுள்ளார் ஆனந்த்.  கடந்த மே மாதம் உலக செஸ் போட்டியில் பட்டம் வென்ற ஆனந்த், அதன்பிறகு நடைபெற்ற லண்டன் கிளாசிக் போட்டியில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

    அதனால் பெரும் பின்னடைவைச் சந்தித்த ஆனந்த், தற்போது அதிலிருந்து மீண்டு வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai