சுடச்சுட

  

  சென்னை ஓபன் செஸ்: ஸீபே அடில்லாவுக்கு அதிர்ச்சியளித்த சாந்தனு

  By dn  |   Published on : 17th January 2013 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  santhanu

  5-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் ஹங்கேரியின் கிராண்ட் மாஸ்டரான ஸீபே அடில்லாவுக்கு இந்தியாவின் சாந்தனு போர்பத்ரா அதிர்ச்சி தோல்வி அளித்தார்.

  அசாமின் முதல் செஸ் வீரரான சாந்தனு 44-வது நகர்த்தலில் ஸீபேவை வீழ்த்தினார். வெற்றி குறித்துப் பேசிய சாந்தனு, "இந்த சுற்றில் வென்றதன் மூலம் கிராண்ட் மாஸ்டருடன் விளையாடி அவரை வீழ்த்த வேண்டும் என்ற எனது கனவு நனவாகியுள்ளது. இதில் வெற்றி கண்டது மிகவும் த்ரில்லாக உள்ளது' என்றார்.

  சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற 3-வது சுற்றின் முடிவில் பெலாரஸின் அலெக்சாண்ட்ரோவ், இந்தியாவின் அதிபன் பாஸ்கரன், அமெரிக்காவின் ரùஸட் ஜியாடினோவ், ஜெர்மனியின் தேஸ்கே ஹென்ரிக், சீனாவின் லூ ஷாங்லெய் ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

  முன்னதாக 3-வது சுற்றில் அலெக்சாண்ட்ரோவ், அமெரிக்காவின் ஆதர்ஷ் ஜெயக்குமாரை வீழ்த்தினார். இந்தியாவின் அதிபன், சகநாட்டவரான சுதாகர் பாபுவையும், இந்தியாவின் விக்ரம்ஜித், வங்கதேசத்தின் ஜியாவுர் ரஹ்மானையும், ஜெர்மனியின் ஹென்ரிக், இந்தியாவின் தேஷ்முக்கையும், இந்தியாவின் பிரசன்னா ராவ், சகநாட்டவரான விக்னேஷையும் வீழ்த்தினர்.

  இந்தியாவின் ரவிச்சந்திரன் சித்தார்த்-கிரண் மனீஷா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

  இந்தியாவின் ஸ்வாதி காடே, சீனாவின் லூ ஷாங்லெயிடம் தோல்வி கண்டார். இந்தியாவின் வினோத் குமார், உஸ்பெகிஸ்தானின் திமித்ரி கயுமோவிடமும், இந்தியாவின் கவி சித்தையா, அமெரிக்காவின் ரùஸட் ஜியாடினோவிடமும் தோல்வி கண்டனர். இந்தியாவின் ஷியாம் நிகில், சகநாட்டவரான வினய் குமாரை தோற்கடித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai