சுடச்சுட

  

  சேவாக்கின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை: செளரவ் கங்குலி

  By dn  |   Published on : 17th January 2013 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sourav

  சேவாக்கின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கவில்லை என்று முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

  இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து சேவாக் நீக்கப்பட்டதால் அவரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா என்று கேட்டபோது, அதை முற்றிலும் மறுத்த கங்குலி, மேலும் கூறியது:

  ஒரு தொடரில் இருந்து நீக்கப்பட்டதால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்ல முடியாது. அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட்டும், திறமையும் உள்ளது. அவர் இந்தியாவுக்காக சிறப்பாக ஆடி ரன் குவித்ததை மறந்துவிட்டோம். எனவே எந்த ஒருவரைப் பற்றியும் நீங்கள் அப்படி சொல்ல முடியாது. அதனால் கொஞ்ச காலம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

  இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தொடர வேண்டுமா என்று கேட்டபோது, "அது தேர்வுக் குழுவினரின் முடிவு' என்றார்.

  தற்போதுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் 2015-க்குள் எதிரணிக்கு சவால் அளிக்கும் வகையில் உருவாகிவிடுவார்களா என்று கேட்டபோது,

  "இப்போதைய அணி இளம் அணி. எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் சிறந்த வீரர்களாக உருவெடுத்துவிடுவார்கள் என்று கூறுவது கடினமானது. அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai