சுடச்சுட

  

  ஒலிம்பிக் பதக்கத்தை ஒப்படைக்க ஆம்ஸ்ட்ராங்குக்கு ஐஓசி கடிதம்

  By dn  |   Published on : 18th January 2013 02:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  armtrong2

  ஒலிம்பிக் பதக்கத்தை ஒப்படைக்குமாறு ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய பிரபல சைக்கிள் பந்தய வீரர் லான்ஸ் ஆம்ஸ்டராங்குக்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) கடிதம் எழுதியுள்ளது.

  2000-ல் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆம்ஸ்ட்ராங் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த நிலையில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையடுத்து சர்வதேச சைக்கிள் பந்தய சம்மேளனம், ஆம்ஸ்ட்ராங்கின் சாதனைகளை தகுதி நீக்கம் செய்ததோடு, பிரபல சைக்கிள் பந்தயமான டூர் டி பிரான்ஸ் போட்டியில் அவர் வென்ற 7 பதக்கங்களையும் பறித்தது. அதை எதிர்த்து ஆம்ஸ்டராங் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்தது.

  அதைத்தொடர்ந்து தற்போது பதக்கத்தை திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த புதன்கிழமை இரவு ஆம்ஸ்ட்ராங்குக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஐஓசி அதிகாரிகள் தெரிவித்தனர்.

  சமீபத்தில் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆம்ஸ்ட்ராங், தான் ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai