சுடச்சுட

  

  சென்னை ஓபன் செஸ்: சேதுராமன், விஜயலட்சுமி அதிர்ச்சித் தோல்வி

  By dn  |   Published on : 18th January 2013 02:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஐந்தாவது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் சேதுராமன், மகளிர் கிராண்ட் மாஸ்டரும், இண்டர்நேஷனல் மாஸ்டருமான விஜயலட்சுமி ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

  சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 4-வது சுற்றில் ஒடிசாவைச் சேர்ந்த மகளிர் கிராண்ட் மாஸ்டரான பத்மினி, சேதுராமனையும், சென்னையைச் சேர்ந்த வசந்தரூபா வர்மன், விஜயலட்சுமியையும் தோற்கடித்தனர்.

  இதேபோல் இந்தியாவின் குமரன், இண்டர்நேஷனல் மாஸ்டரும், கிராண்ட் மாஸ்டர் "நார்ம்ஸ்' வைத்திருப்பவருமான ரத்னாகரனையும், சென்னையின் வைஷாலி, வங்கதேசத்தின் ஜியாவூர் ரஹ்மானையும் வீழ்த்தினர்.

   4 சுற்றுகளின் முடிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரான பெலாரஸின் அலெக்சாண்ட்ரோவ், ரஷியாவின் ஆண்ட்ரேய் தேவியத்கின், உஸ்பெகிஸ்தானின் மாரட் துமேவ், சீனாவின் லூ ஷெங்லெய், இந்தியாவின் ரகுராம் ராவ், ஜெர்மனியின் ஹென்றிக் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

  இந்தியாவின் பத்மினி ரெüத், லலித் பாபு, பிரவீண் குமார், ஸ்வப்நில், அதிபன், ஷியாம் நிகில், வங்கதேசத்தின் நியாஸ் முர்ஷெத், சீனாவின் வான் யங்குயோ ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளன. இன்னும் 7 சுற்றுகள் மீதமுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai