சுடச்சுட

  
  paes

  ஆடவர் இரட்டையர் பிரிவில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 3-6, 5-7 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன்-இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிச் ஜோடியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது.

  89 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆண்டர்சன்-எர்லிச் ஜோடி சிறப்பான சர்வீஸ்களை அடித்ததோடு, தங்களுக்கு கிடைத்த 7 "பிரேக் பாயிண்ட்' வாய்ப்புகளில் 4-ஐ தங்கள் வசப்படுத்தியது.

  பயஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரஷியாவின் எலினா வெஸ்னினாவுடன் இணைந்து களமிறங்குகிறார். பயஸ்-வெஸ்னினா ஜோடி கடந்த முறை ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

  இந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் பாகிஸ்தானின் குரேஷி-ஸ்வீடனின் சோஃபியா அர்வித்சன் ஜோடியை சந்திக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai