சுடச்சுட

  
  saina

  மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா நெவால் 21-12, 21-9 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் பியூ இன் இய்ப்பை தோற்கடித்தார்.

  சாய்னாவின் அதிரடி சர்வீஸ்களுக்கு முன்பு ஹாங்காங் வீராங்கனையின் ஆட்டம் எடுபடாததால் 30 நிமிடங்களிலேயே இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. சாய்னா தனது காலிறுதிச் சுற்றில் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை சந்திக்கிறார். இவர்கள் இருவரும் முதல்முறையாக மோதவுள்ளனர்.

  முன்னதாக நஜோமி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-13, 21-13 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் லின்டாவெனி ஃபனேட்ரியை வீழ்த்தினார்.

  காஷ்யப் தோல்வி: இந்தியாவின் முன்னணி வீரரான காஷ்யப் தனது காலிறுதிச் சுற்றில் 17-21, 14-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்கென்ஸனிடம் தோல்வி கண்டார். முன்னதாக காஷ்யப் தனது முதல் சுற்றில் ஆடியபோது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அதை பொருட்படுத்தாது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்றார்.

  சாய்னா 2-வது இடம்: சர்வதேச தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார் இந்தியாவின் சாய்னா. மலேசிய ஓபன் தொடங்குவதற்கு முன்னதாக 3-வது இடத்தில் இருந்த சாய்னா, தற்போது ஓர் இடம் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது சாய்னாவின் அதிகபட்ச தரவரிசை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் லீ ஸியூரூய் முதலிடத்தில் உள்ளார்.

  காஷ்யப் 10-வது இடம்: மலேசிய ஓபனில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தபோதிலும், தனது சிறப்பான ஆட்டத்தால் முதல்முறையாக தரவரிசையில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார் இந்தியாவின் காஷ்யப்.

  இந்தியாவின் பி.வி.சிந்து 16-வது இடத்திலும், ஜெயராம் 31-வது இடத்திலும் உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai