சுடச்சுட

  

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு ரோஜர் ஃபெடரர், ஆன்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ், விக்டோரியா அசரென்கா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 4-வது நாளான வியாழக்கிழமை ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் நிகோலேய் டேவ்டென்கோவையும், பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-2, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் போர்ச்சுகலின் ஜோயா செளசாவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். அடுத்த சுற்றில் ஃபெடரர், ஆஸ்திரேலியாவின் பெர்னாட் டாமிக்கையும், ஆன்டி முர்ரே, லிதுவேனியாவின் பெரன்கிஸையும் சந்திக்கின்றனர்.

  இதேபோல் பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்கா 6-3, 7-6 (1), 6-3 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கோ ஸþய்டாவையும், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கரையும், குரோஷியாவின் மரின் சிலிச் 7-5, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ராஜீவ் ராமையும், கனடாவின் மிலஸ் ரயோனிக் 7-6 (2), 6-2, 6-3 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் லூகாஸ் ரúஸாலையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

  மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நடப்புச் சாம்பியன் விக்டோரியா அசெரன்கா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் கிரீஸின் எலினியையும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கார்பினையும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-1, 6-4 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் டோனா வெகிக்கையும், ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா 6-2, 6-1 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் சூ வெய் ஷியாவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai