சுடச்சுட

  

  ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஷரபோவா

  By dn  |   Published on : 19th January 2013 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shara2

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியன் நோவக் ஜோகோவிச், மரியா ஷரபோவா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 5-வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக்கை வீழ்த்தினார்.

  இதேபோல் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச், செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, ஜப்பானின் நிஷிகோரி ஆகியோரும் தங்களின் 3-வது சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

  ஷரபோவா, அக்னீஸ்கா வெற்றி: மகளிர் ஒற்றையர் 3-வது சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா 6-1, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ûஸயும், போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் ஹெதர் வாட்சனையும் தோற்கடித்தனர்.

  இதேபோல் சீனாவின் லீ நா 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் சிர்ஸ்டியாவையும், செர்பியாவின் அனா இவானோவிச் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் சகநாட்டு வீராங்கனையான ஜெலினா ஜான்கோவிச்சையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

  சானியா-பிரையன் ஜோடி வெற்றி: கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா-அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர்-லூக் சேவில்லே ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai