சுடச்சுட

  
  try

  பள்ளிக் கல்வித் துறை சார்பில் 55-வது மாநில அளவிலான தட களப் போட்டிகள் திருச்சி "பெல்' வளாகத்திலுள்ள நேரு விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கின.

  போட்டிகளைத் தொடங்கிவைத்து மாநிலப் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி பேசியது:

  தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 2 கோடி, வெள்ளி வென்றால் ரூ. ஒரு கோடி, வெண்கலம் வென்றால் ரூ. 50 லட்சம், ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றால் ரூ. 50 லட்சம், வெள்ளி வென்றால் ரூ. 30 லட்சம், வெண்கலம் வென்றால் ரூ. 20 லட்சம், தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம் வென்றால் ரூ. 5 லட்சம், வெள்ளி வென்றால் ரூ. 3 லட்சம், வெண்கலம் வென்றால் ரூ. 2 லட்சம் பரிசளிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா' என்றார் சிவபதி. அதைத் தொடர்ந்து மாநில விளையாட்டுக் கொடியை ஏற்றி வைத்து "பெல்' செயல் இயக்குநர் ஏ.வி. கிருஷ்ணன் பேசினார்.

  விழாவில் எம்எல்ஏக்கள் டி.பி. பூனாட்சி (மண்ணச்சநல்லூர்), ஆர். சந்திரசேகர் (மணப்பாறை) உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கு. தேவராஜன் வரவேற்றார். முடிவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் நன்றி கூறினார்.

  வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றோர் விவரம்:

  1500 மீட்டர் ஓட்டம் (முதல் மூன்று பரிசுகள் வரிசைப்படி): 19 வயதுக்குள்பட்டோர் மகளிர் பிரிவு: கே. பிரியா (வேலூர் மண்டலம்), ஜி. வினோதினி (சென்னை மண்டலம்), எஸ். பூங்கொடி (நாமக்கல் மண்டலம்).

  ஆடவர் பிரிவு: எம். காசி மாயன் (மதுரை மண்டலம்), என். பரமேசுவரன் (திண்டுக்கல் மண்டலம்), கே. மாரிமுத்து (கடலூர் மண்டலம்).

  800 மீட்டர் ஓட்டம்: 17 வயதுக்குள்பட்டோர் ஆடவர் பிரிவு: ஆர். பாலகிருஷ்ணன் (சென்னை மண்டலம்), எஸ். சஞ்சீவி செல்வராஜ் (கன்னியாகுமரி மண்டலம்), எஸ். காளிதாஸ் (விளையாட்டு விடுதி). 17 வயதுக்குள்பட்டோர் மகளிர் பிரிவு: கே. சிந்தானா (சென்னை மண்டலம்), எம். சந்தியா (ஈரோடு மண்டலம்), எம். ஐஸ்வர்யா (திருச்சி மண்டலம்).

  600 மீட்டர் ஓட்டம்: 14 வயதுக்குள்பட்டோர் மகளிர் பிரிவு: எல். சமயா ஸ்ரீ (கோவை மண்டலம்), எஸ். வெண்ணிலா (தஞ்சை மண்டலம்), வி. காளியம்மாள் (வேலூர் மண்டலம்). 14 வயதுக்குள்பட்டோர் ஆடவர் பிரிவு: ஆர். நவீன் (விளையாட்டு விடுதி- மதுரை), பி. பாரத் (சென்னை மண்டலம்), எஸ்.பி. சோனி (கோவை மண்டலம்).

  மாநில சாதனை: 14 வயதுக்குள்பட்டோருக்கான 600 மீ. ஓட்டத்தில் முதலிடம் பெற்ற ஆர். நவீன், 1.29.5 விநாடிகளில் இலக்கை எட்டி மாநில சாதனையை முறியடித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai