சுடச்சுட

  

  மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ள "பி' பிரிவு லீக் ஆட்டங்கள் அனைத்தும் ஒடிசாவின் கட்டக் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக ஐசிசி மற்றும் பிசிசிஐயிடம் அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேநேரத்தில் போட்டி இயக்குநரான சுரு நாயக், போட்டி கட்டாக் நகருக்கு மாற்றப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார்.

  முன்னதாக மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

  இதையடுத்து ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் விளையாட வந்திருந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனை கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் 9 பேரும் திருப்பியனுப்பப்பட்டனர்.

  இந்த நிலையில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியும் இடம்பெற்றிருப்பதால் தங்களால் போட்டியை நடத்த முடியாது.

  எனவே போட்டியை இங்கிருந்து மாற்றுங்கள் என்று பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்தது மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம்.

  இதையடுத்து பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ள "பி' பிரிவு லீக் ஆட்டங்கள் அனைத்தும் கட்டக் நகருக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்தப் பிரிவில் பாகிஸ்தான் தவிர, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

  தற்போதைய போட்டி அட்டவணைப்படி நாக் அவுட் சுற்று மும்பையில் நடைபெறவுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் நாக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றால் என்ன நடக்கும் என்று நாயக்கிடம் கேட்டபோது, "அது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும்' என்றார்.

  10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 31-ம் தேதி முதல் பிப்ரவரி 17 வரை கட்டக், மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai