சுடச்சுட

    

    மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி: அரையிறுதியில் சாய்னா

    By dn  |   Published on : 19th January 2013 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    saina

    மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சாய்னாவும், ஜப்பானின் நஜோமியும் மோதினர்.

    இதில் சாய்னா 21-11, 14-21, 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது முழங்காலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நஜோமி போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை சாய்னா எளிதாக வென்றபோதிலும், 2-வது செட்டில் பின்னடைவைச் சந்தித்தார். அந்த செட்டில் அபாரமாக ஆடிய நஜோமி ஒரு கட்டத்தில் 14-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

    இதன்பிறகு சாய்னா அபாரமாக ஆடினாலும், அந்த செட்டை மீட்கமுடியவில்லை. இதனால் அந்த செட் 21-14 என்ற கணக்கில் நஜோமி வசமானது. 3-வது செட்டில் நஜோமி பாதியிலேயே வெளியேற, சாய்னாவின் வெற்றி உறுதியானது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai