சுடச்சுட

  

  ரஞ்சி கிரிக்கெட்: மும்பை-சர்வீசஸ் ஆட்டம் மழையால் பாதிப்பு

  By dn  |   Published on : 19th January 2013 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பை-சர்வீசஸ் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

  தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஒரு பந்துகூட வீசாத நிலையில் 3-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. தற்போதைய நிலையில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 380 ரன்கள் குவித்துள்ளது.

  அடுத்த இரு நாள்களுக்குள் இரு அணிகளின் முதல் இன்னிங்ஸýம் முடிவுக்கு வராதபட்சத்தில் கூடுதலாக ஒருநாள் வழங்கப்படும். அதிலும் முடியாவிட்டால், டாஸ் முறையில் வெற்றி தீர்மானிக்கப்படும்.

  செüராஷ்டிரத்துக்கு வாய்ப்பு: ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடும் வாய்ப்பை சற்றேறக்குறைய உறுதி செய்துவிட்டது செüராஷ்டிரம்.

  ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் செüராஷ்டிரம் தனது முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது.

  இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே கையில் உள்ளதால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெறுவது கடினம். இதனால் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் செüராஷ்டிரம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai