சுடச்சுட

    
    stump

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 28 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர்கள் ரஹானே 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து கம்பீரும், கோலியும் சேர்ந்து ஆடினர். இந்திய அணி 78 ரன்கள் எடுத்திருந்த போது கம்பீர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆட வந்த யுவராஜ் சிங் 30 ரன்களில் ஆட்டமிழக்க தோனி களமிறங்கினார். கோஹ்லியும் (77), தோனியும் (10) சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். கோஹ்லி 79 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 77 ரன்களை எடுத்தார்.

    முன்னதாக, இங்கிலாந்து அணியின் ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai