சுடச்சுட

  

  அகில இந்திய கபடி: ராணுவம், ஒட்டன்சத்திரம் அணிகள் சாம்பியன்

  By dn  |   Published on : 20th January 2013 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற 22-வது அகில இந்திய கபடிப் போட்டியின் ஆடவர் பிரிவில் தில்லி ராணுவ அணியும், மகளிர் பிரிவில் ஒட்டன்சத்திரம் கல்ச்சுரல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் கோப்பையைக் கைப்பற்றின.

  திருச்செங்கோடு - சேலம் சாலையில் உள்ள திருவேங்கடம் நினைவுத் திடலில் கடந்த 14-ம் தேதி தொடங்கிய இப் போட்டியின் இறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 

  மகளிர் பிரிவு: மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஒட்டன்சத்திரம் அணி முதல்பாதியில் பின்னடைவைச் சந்தித்தாலும், 2-வது பாதியில் சிறப்பாக விளையாடி 32-23 என்ற புள்ளிகள் கணக்கில் கோபி பி.கே.ஆர். அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

  ஆடவர் பிரிவு: ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தில்லி ராணுவ அணி 24-4 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னிமலை கே.எம்.கே. அணியை வென்று கோப்பையை தட்டிச் சென்றது.

  பரிசளிப்பு விழாவுக்கு விழாக் குழுத் தலைவர்  ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தில்லி ராணுவ அணிக்கு ரூ. 1 லட்சம், கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 2-வது இடம்டிபிடித்த சென்னிமலை கே.எம்.கே. அணிக்கு ரூ. 75 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. அரையிறுதி வரை முன்னேறிய சென்னை ஐசிஎப், தமிழ்நாடு காவல் துறை அணிகளுக்கு தலா ரூ. 40 ஆயிரம் ரொக்கப் பரிசு  வழங்கப்பட்டன.

  மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஒட்டன்சத்திரம் கல்ச்சுரல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ. 75 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 2-வது இடம்பிடித்த கோபி பிகேஆர்  அணிக்கு  ரூ. 50 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. அரையிறுதி வரை முன்னேறிய சேலம் ஏவிஎஸ், மதுரை சக்தி டைல்ஸ அணிகளுக்கு தலா ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

  ஆடவர் பிரிவில் தில்லி அணியின் மேட்டி, காவல் துறை அணியின் ரகு ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மகளிர் பிரிவில் கல்ச்சுரல் ஸ்போர்ட்ஸ் யோகலட்சுமி, சக்தி டைல்ஸ் குருசுந்தரி ஆகியோர் சிறந்த வீராங்கனைகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

  பரிசளிப்பு விழாவில் பிஎஸ்என்எல் மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுகம்,  ஐஓபி வங்கி அலுவலர் இளங்கோ, மக்கள் தொடர்பு அலுவலர் சிந்தியா பாபு உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கபடி விளையாட்டின் முன்னோடிகள் கெüரவிக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai