சுடச்சுட

  

  * மும்பை-சர்வீசஸ் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தின் 4-வது நாள் ஆட்டமும் பாதிக்கப்பட்டது. சனிக்கிழமை மழை பெய்யாத போதிலும், மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு பந்துகூட வீசப்படவில்லை.

  * பஞ்சாப்-செüராஷ்டிரம் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் வெற்றிபெற 304 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அந்த அணியின் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. ஆட்டம் டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் செüராஷ்டிர அணி இறுதிச்சுற்றில் விளையாட தகுதிபெறும்.

  * உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னௌவில் நடைபெற்ற டெல்லி வேவ்ரைடர்ஸ்-உத்தரப் பிரதேசம் விஸôர்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி இந்தியா லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

  * சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வரும் 5-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் இதுவரை 7 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் இந்தியாவின் லலித் பாபு, அதிபன் பாஸ்கரன், ஜெர்மனியின் ஹென்ரிக் தெஸ்கே, சீனாவின் வான் யங்குவோ ஆகியோர் தலா 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். 14 பேர் தலா 5.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர். சென்னையைச் சேர்ந்த வைஷாலி, மகளிர் இண்டர்நேஷனல் நார்ம்ஸ் பெறுவதற்கான வாய்ப்பை நெருங்கியுள்ளார்.

  * ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய பிரபல சைக்கிள் பந்தய வீரரான லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் பேட்டியின் 2-வது பகுதி வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்காவில் ஒளிபரப்பானது. இதில் ஆம்ஸ்ட்ராங் மிக உருக்கமாகப் பேசியுள்ளார்.

  * நான் ஊக்கமருந்து உட்கொண்டதாக அனைவரும் கூறினாலும், அதை எனது 5-வது மகன் லூக் நம்பவில்லை. அவனிடம் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்' என்றார். அப்போது அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் பொங்கியது. வார்த்தைகள் வராமல் தடுமாறினார்.

  * ஆம்ஸ்ட்ராங் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பேட்டி தொலைக்காட்சியில் வெளியானதை அமெரிக்காவில் 32 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மற்ற நாடுகளில் பார்த்தவர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. 1.1 லட்சம் பேர் இணையதளத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்துள்ளனர்.

  * ஆம்ஸ்ட்ராங், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருப்பதால் அவருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai