சுடச்சுட

  
  19dsport

  பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான 55-வது தட களப் போட்டியின் 2-வது நாளில் சென்னை, திருநெல்வேலி மாணவர்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றனர். 2-வது நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரம் (முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் வரிசைப்படி):

  14 வயதுக்குள்பட்டோர்:  நீளம் தாண்டுதல்: திருநெல்வேலி எஸ். பகவதி நிதிஷ் குமார், சென்னை யு. பாரத், கிருஷ்ணகிரி எம். கமலஹாசன். குண்டு எறிதல்: கோவை எஸ். பைசல் ரகுமான், திண்டுக்கல் எல்எம்பி. சூர்யா, ஈரோடு டி.ஆர். கோகுல். வட்டு எறிதல்: பெரம்பலூர் எம். சுபாஷ், சென்னை ஆர். கீர்த்திகேசன், கோவை எம். கார்த்திகேயன்.

  19 வயதுக்குள்பட்டோர்: ஈட்டி எறிதல்: திருச்சி எஸ். வாசுதுரை, தஞ்சாவூர் கே. விவேக், ஈரோடு ஆர். தேவேந்திரன். கோலூன்றித் தாண்டுதல்: கிருஷ்ணகிரி ஏ. ரஞ்சித், தேனி கே. அமரன், கும்பகோணம் டி. பிரபாகரன்.

  மும்முறைத் தாண்டுதல்: மேலையூர் டி. விமல் முகேஷ், குன்னூர் டி. கேவின் பீட்டர், திண்டுக்கல் எம். அசோக் குமார்.

  17 வயதுக்குள்பட்டோர்: உயரம் தாண்டுதல்: மதுரை எஸ். காளிதாஸ், சென்னை என். முகமது அகில், மதுரை வி. சிபிசக்ரவர்த்தி, கோவை ஆர்.கே. சுந்தரேஸ்வரன் (இருவர் மூன்றாம் பரிசு).  வட்டு எறிதல்- கோவை எஸ். மித்ராவருண், திண்டுக்கல் எஸ். கிருபாகரன், திருநெல்வேலி கே.எஸ். ஆதித்யா கார்த்திகேயன். மும்முறைத் தாண்டுதல்- திருநெல்வேலி எம். ஜீவா, ராமநாதபுரம் கே. முல்லேஸ்வரன், வேலூர் எஸ். நவாஸ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai