சுடச்சுட

  

  ஆஸ்திரேலிய ஓபன்: வாவ்ரிங்காவை போராடி வென்றார் ஜோகோவிச்

  By dn  |   Published on : 21st January 2013 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  joko1

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கடும் போராட்டத்துக்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறினார் நடப்புச் சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.

  இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 1-6, 7-5, 6-4, 6-7 (5), 12-10 என்ற செட் கணக்கில் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை வீழ்த்தினார். 

  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார் ஜோகோவிச். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் அபாரமாக ஆடிய வாவ்ரிங்கா அதை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டை பெரும் போராட்டத்துக்குப் பிறகு தன்வசமாக்கிய ஜோகோவிச், 3-வது செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார். எனினும் டைபிரேக்கர் வரை சென்ற 4-வது செட் 7-6 (5) என்ற கணக்கில் வாவ்ரிங்கா வசமானது. இதனால் வெற்றியைத் தீர்மானிக்கும் டை பிரேக்கர் செட் பரபரப்பாக சென்றது. இதில் விடாப்பிடியாக போராடிய ஜோகோவிச், 12-10 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி வெற்றி கண்டார். இந்த ஆட்டம் 5 மணி நேரம், 2 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் கடைசி செட் மட்டுமே ஒரு மணி நேரம் 44 நிமிடங்கள் நடைபெற்றது.

  ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் டேவிட் பெரர், நிகோலஸ் அல்மாக்ரோ, செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

  ஷரபோவா சாதனை: மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷியாவின் மரியா ஷரபோவா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் 19-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் ஃபிலிப்கென்ûஸ தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். ஷரபோவா அடுத்த சுற்றில் சகநாட்டு வீராங்கனையான இகடெரினா மகரோவாவை சந்திக்கிறார். 

  இந்தப் போட்டியில் இதுவரை 4 சுற்றுகளில் விளையாடியுள்ள ஷரபோவா 5 கேம்களில் மட்டுமே எதிர் வீராங்கனையிடம் புள்ளியை இழந்துள்ளார். இது ஆஸ்திரேலிய ஓபனில் புதிய சாதனையாகும். இதற்கு முன்னர் மோனிகா செலஸ் (1991), ஸ்டெஃபி கிராப் (1993) ஆகியோர் 8 கேம்களில் புள்ளிகளை இழந்து காலிறுதிக்கு முன்னேறியதே சாதனையாக இருந்தது. அதை இப்போது ஷரபோவா முறியடித்துள்ளார். முன்னணி வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் செர்பியாவின் அனா இவானோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

  2-வது சுற்றில் பூபதி-நடியா ஜோடி: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரஷியாவின் நடியா பெட்ரோவா ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அனாஸ்டாஸியா-நெதர்லாந்தின் ஜூலியன் ரோஜர் ஜோடியை வீழ்த்தியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai