சுடச்சுட

  

  ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தரவரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

  இங்கிலாந்துக்கு எதிரான 2 மற்றும் 3-வது ஆட்டங்களில் வெற்றி கண்டதன் மூலம் 3-வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா.  அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கா, தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள நியூஸிலாந்திடம் தோல்வி கண்டதால் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்தது. தென் ஆப்பிரிக்கா 118 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

  அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்திடம் இந்தியா தோற்குமானால் தரவரிசையில் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். எனினும் இந்தியா-இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து தொடர்கள் முடிந்த பிறகே ஐசிசியின் அதிகாரப்பூர்வ தரவரிசை வெளியிடப்படும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai