சுடச்சுட

  

  ஐந்தாவது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியின் 8-வது சுற்றில் இந்திய வீரர் எஸ்.எல்.நாராயணனிடம் ஹங்கேரியின் கிராண்ட் மாஸ்டர் ஸீபே அடில்லா அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

  சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை வரை 8 சுற்றுகள் முடிந்துள்ளன. இதன் முடிவில் எஸ்.எல்.நாரயணன், பெலாரஸின் அலெக்சாண்ட்ரோவ், இந்தியாவின் அதிபன் பாஸ்கரன், லலித் பாபு, ஜெர்மனியின் தேஷ்கே ஹென்ரிக், சீனாவின் லூ ஷங்லெய் ஆகியோர் தலா 6.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

  இந்தப் போட்டியில் இன்னும் 3 சுற்றுகள் மீதமுள்ளதால் இந்தியாவின் வைஷாலி, எஸ்.எல்.நாராயணன், பி.குமரன், சீனாவின் வான் யங்குவோ ஆகியோர் கிராண்ட் மாஸ்டர் நார்ம்ஸ் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதில் நாராயணனுக்கு நார்ம்ஸ் கிடைக்கும் பட்சத்தில் அவர் கிராண்ட் மாஸ்டராகிவிடுவார். ஏற்கெனவே அவர் 2 கிராண்ட் மாஸ்டர் நார்ம்ஸ் பெற்றுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai