சுடச்சுட

  

  பிப்ரவரி 1 முதல் கன்னியாகுமரியில் சர்வதேச ஃபிடே  செஸ் போட்டி

  By dn  |   Published on : 21st January 2013 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chesss

  முதலாவது சர்வதேச ஃபிடே செஸ் போட்டிகள் பிப்ரவரி 1-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகின்றன.

  இதுகுறித்து மாவட்ட செஸ் சங்க தலைவர் ஏ.குளத்தூரான் பிள்ளை, மாவட்டச் செயலர் ம.ஏப்ரேம், ரோகினி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சசி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

  கன்னியாகுமரி மாவட்ட செஸ் சங்கமும், அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகினி தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து முதலாவது சர்வதேச ஃபிடே செஸ் போட்டியை நடத்துகின்றன.

  இப் போட்டி  ரோகிணி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. நேபாளம் மற்றும் காஷ்மீர், மேற்கு வங்கம், குஜராத், கோவா, கர்நாடகம், ஆந்திரம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கûச் சேர்ந்த சுமார் 400 வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்கின்றனர். சர்வதேச தரப்புள்ளிகளைப் பெறுவதற்கான இந்தப் போட்டி முதல்முறையாக இங்கு நடத்தப்படுகிறது. சர்வதேச தரப்புள்ளிகள் பெற ஒரு வீரர், சர்வதேசப் புள்ளிகள் பெற்ற 9 வீரர்களுடன் விளையாடி குறிப்பிட்ட புள்ளிகள் பெற வேண்டும்.

  இந்த மாவட்டத்தில் இப்போது 52 சர்வதேச தரப்புள்ளிகள் பெற்ற வீரர்கள் உள்ளனர். இந்தப் போட்டி 9 சுற்றுகளைக் கொண்டது.

  பிப்ரவரி 1-ம் தேதி பகல் 1 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ரோகினி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சசி போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.

  பிப்ரவரி 4 ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், கோப்பையும் வழங்கப்படும். முதல் 25 இடங்களை பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசாக மொத்தம் ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.

  இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 7, 9, 11 மற்றும் 13 வயதுக்குள்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தனித்தனியாக தலா 5 கோப்பைகளும், போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

  ஆர்வமுள்ள வீரர்கள் தங்கள் பெயர்களை ஜனவரி 28-ம் தேதிக்குள் மாவட்ட செஸ் சங்கத்தில் பதிவு செய்யலாம்.

  மேலும் விவரங்களுக்கு 99940 29796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai