சுடச்சுட

  
  starc

  ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

  சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது.

  அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 60 ரன்கள் எடுத்தார். பின்வரிசையில் மிட்செல் ஸ்டார்க் 37 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார்.

  இலங்கைத் தரப்பில் நுவான் குலசேகரா 3 விக்கெட்டுகளையும், லசித் மலிங்கா, திசாரா பெரேரா, ரங்கனா ஹெராத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  ஆஸ்திரேலியாவின் பேட்டிங்குக்குப் பிறகு மழை பெய்தது. இதனால் இலங்கை பேட்டிங்கைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் பேட் செய்த இலங்கை அணி 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தபோது, மைதானத்தில் காணப்பட்ட ஈரப்பதம் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. அப்போது தில்ஷான் 9, ஜெயவர்த்தனா 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

  5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஆட்டம் வரும் வரும் வெள்ளிக்கிழமை ஹோபர்ட் நகரில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், தொடர் சமநிலையில் முடியும். இலங்கை வெற்றி பெற்றால் தொடர் அதன் வசமாகிவிடும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai