சுடச்சுட

  

  திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 55-வது குடியரசு தின தட களப் போட்டியில் மாணவர்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி விளையாட்டு விடுதி அணியும், மாணவிகள் பிரிவில் சென்னை அணியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றன.

  பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சி பெல் வளாகத்திலுள்ள ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இப் போட்டியில் பல்வேறு வயது பிரிவுகளில் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றவர்களின் விவரம்: 

  14 வயதுக்குள்பட்டோர் பிரிவு:   ஆர். நவீன் (ஓட்டப் பந்தயம், மதுரை விளையாட்டு விடுதி), எம். ஜெகதீசன் (ஓட்டப் பந்தயம், மதுரை விளையாட்டு விடுதி), எல். சமயாஸ்ரீ (ஓட்டப் பந்தயம், கோவை), வி. தமிழ்ச் செல்வி (ஓட்டப் பந்தயம், சென்னை டிஎஸ்டி ராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி).

  17 வயதுக்குள்பட்டோர் பிரிவு: எஸ். மித்ராவருண் (வட்டு, குண்டு எறிதல், கோவை ராசாகொண்டலார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி), எம்.எஸ். அருண் (ஓட்டப் பந்தயம், கிருஷ்ணகிரி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி),  பி. பவித்ரா (ஓட்டம், சென்னை டிஎஸ்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி).

  19 வயதுக்குள்பட்டோர் பிரிவு: ஏ. தருண் (ஓட்டப் பந்தயம், திருப்பூர் செஞ்சுரி பவுண்டேஷன் மேல்நிலைப் பள்ளி), பெர்யெல் ஹட்சன் (ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், சென்னை சிஎஸ்ஐ ஜெசி மோசஸ் மேல்நிலைப் பள்ளி).

  பல்வேறு போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் மாணவர்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும் (96 புள்ளிகள்), மாணவிகள் பிரிவில் சென்னை அணியும் (78 புள்ளிகள்) ஒட்டுமொத்த சாம்பியன் பட்டங்களை வென்றன.

  இதைத்தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அணிகளுக்கும் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வக்குமார் பரிசுகளை வழங்கினார்.

  பெல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஏ.வி. கிருஷ்ணன், பொது மேலாளர் (மனிதவள மேம்பாட்டுத் துறை) எம். பழனிவேல், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் வி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai