சுடச்சுட

  
  run

  மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10-வது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மும்பை மாரத்தான் போட்டியின் ஆடவர் பிரிவில் உகாண்டா வீரர் ஜாக்சன் கிப்ரோப் முதலிடம் பிடித்தார்.

  42 கி.மீ. கொண்ட பந்தய தூரத்தை 2 மணி நேரம், 9 நிமிடங்கள், 32 விநாடிகளில் கடந்ததன் மூலம் மும்பை மாரத்தான் போட்டியில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டியவர் என்ற சாதனையையும் ஜாக்சன் படைத்தார். முன்னதாக 2 மணி நேரம், 9 நிமிடம், 54 நிமிடங்களில் இலக்கை கடந்ததே சாதனையாக இருந்தது. முதலிடம் பிடித்ததன் மூலம் ரூ.21.5 லட்சமும், புதிய சாதனை படைத்ததற்கு ஊக்கத் தொகையாக ரூ. 8 லட்சமும் கிப்ரோப்புக்கு கிடைத்தது.

  எத்தியோப்பியாவின் ஜேக்கப் சேஷாரி (2 மணி, 9 நிமிடம், 43 விநாடிகள்) 2-வது இடத்தையும், கென்யாவின் எலிஜா கெம்போய் (2 மணி, 10 நிமிடம், 55 விநாடிகள்) 3-வது இடத்தையும் பிடித்தனர். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றவரான கென்யாவின் லெபன் மோய்பெனால் இந்த முறை 5-வது இடத்தையே பிடித்தார்.

  கிப்கெட்டர் முதலிடம்: மகளிர் பிரிவு மாரத்தான் போட்டியில் கென்யாவின் வேலன்டைன் கிப்கெட்டர் 2 மணி, 24 நிமிடம், 33 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் மும்பை மாரத்தானில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவருக்கு ஊக்கத் தொகை உள்பட ரூ.29.5 லட்சம் ரொக்கப் பரிசு கிடைத்தது.

  எத்தியோப்பியாவின் தின்கேஷ் மேகாஷ் ( 2 மணி, 28 நிமிடம், 46 விநாடிகள்) 2-வது இடத்தையும், அபெரு மேகுரியா (2 மணி, 29 நிமிடம், 3 விநாடிகள்) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

  ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் 2-வது இடத்தைப் பிடித்தவர்களுக்கு தலா ரூ.10.5 லட்சமும், 3-வது இடத்தைப் பிடித்தவர்களுக்கு தலா ரூ.8 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

  இந்தியர்கள்: இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இந்தியர்களில் ஆடவர் பிரிவில் ராணுவ வீரர் பின்னிங் லிங்கோய் (2 மணி, 21 நிமிடம், 51 விநாடிகள்) முதலிடத்தைப் பிடித்தார்.

  மகளிர் பிரிவில் மகாராஷ்டிரத்தின் லலிதா பாபர் (2 மணி, 53 நிமிடம், 42 விநாடிகள்) முதலிடத்தைப் பிடித்தார். கடந்த முறையும் இவர் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் இவர்கள் இருவரும் தலா ரூ.4.5 லட்சம் பரிசுத் தொகையை தட்டிச் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai