சுடச்சுட

  

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் 229 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது செளராஷ்டிரம்.

  குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த செளராஷ்டிரம் 477 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் 299 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 178 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில், 2-வது இன்னிங்ஸை ஆடிய செளராஷ்டிரம், 4-வது நாளான சனிக்கிழமை 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  இதைத் தொடர்ந்து 349 ரன்கள் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ûஸ ஆடிய பஞ்சாப் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.

  கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி 40 ஓவர்களில் 119 ரன்களுக்கு சுருண்டது. இதனால் செளராஷ்டிர அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

  செüராஷ்டிரம் தரப்பில் ஜோஷி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக அவர் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டி சென்றார்.

  கடந்த 75 ஆண்டுகளில் செளராஷ்டிர அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக 1937-38-ல் நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்த அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்வி கண்டது. அப்போது செளராஷ்டிரம் அணி நவநகர் அணி என்ற பெயரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

  6-வது நாள் ஆட்டத்தில் மும்பை-சர்வீசஸ் அணிகள்: தில்லியில் நடைபெற்று வரும் மும்பை-சர்வீசஸ் அணிகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதி ஆட்டம் 6-வது நாளாக திங்கள்கிழமையும் (ஜன.21) நடைபெறுகிறது.

  வழக்கமாக 5 நாள்கள் விளையாடப்படும். ஆனால் இதில் 3 மற்றும் 4-வது நாள் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதன் காரணமாக வெற்றியைத் தீர்மானிப்பதற்காக இந்த ஆட்டம் 6-வது நாளுக்கு சென்றுள்ளது.

  இந்த ஆட்டத்தில் மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 152 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 454 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அகர்கர் 145 ரன்கள் குவித்தார்.

  இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய சர்வீசஸ் அணி 5-வது நாள் ஆட்டநேர முடிவில் 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஸ்வைன் 64, யஷ்பால் சிங் 43 ரன்களுடன் களத்தில் உள்ளனர். கடைசி மற்றும் 6-வது நாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. ஆட்டநேரத்துக்குள் சர்வீசஸ் அணியை மும்பை வீழ்த்த வேண்டும்.

  அப்படி செய்யும் பட்சத்தில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை ஆட்ட நேரத்துக்குள் சர்வீசஸ் அணி முதல் இன்னிங்ûஸ ஆடி முடிக்காவிட்டோலா, மழை காரணமாக ஆட்டம் தடைபட்டாலோ டாஸ் போட்டு வெற்றி தீர்மானிக்கப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai