சுடச்சுட

  

  இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு எதிராக விளையாட்டு அமைப்பு போராட்டம்

  By dn  |   Published on : 22nd January 2013 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு எதிராக கிளீன் ஸ்போர்ட்ஸ் இந்தியா எனும் விளையாட்டு அமைப்பு ஒத்துழையாமை போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

  சர்வேதச ஒலிம்பிக் சங்கம் சமீபத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பென்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தது.

  இந்நிலையில், சஸ்பென்ட் செய்யப்பட்ட இந்திய ஒலிம்பிக் சங்க செயலர் லலித் பனோட், கிளீன் ஸ்போர்ட்ஸ் அமைப்பில் உள்ள வீரர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  வீரர்களின் விவரங்கள் மற்றும், புகைப்படங்களை தில்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  இதை எதிர்த்து கிளீன் ஸ்போர்ட்ஸ் அமைப்பில் உள்ள வீரர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

  விளையாட்டுத் துறையில் ஊழலை ஒழிக்கவும், தகுதியுள்ள வீரர்களை ஊக்குவிக்கவும் ஒலிம்பிக் வீராங்கனையான அஸ்வின் நாச்சப்பாவால் ஆரம்பிக்கப்பட்டதுதான் "கிளீன் ஸ்போர்ட்ஸ் இந்தியா'.

  இந்தக் கடிதம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு எதிராக அர்ஜுனா விருது பெற்றவரும் முன்னாள் தடகள வீராங்கனையான ரீத் அபிரஹாம் கூறுகையில், "அர்ஜுனா விருது பெற்ற எங்களுக்கு லலித் பனோட் கடிதம் எழுதியுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்ம் முறைகேடானது என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது.

  அதனால் நாங்கள் ஒலிம்பிக் சங்கத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது. கிளீன் ஸ்போர்ட்ஸ் அமைப்பில் உள்ள மற்ற வீர்ரகளும் இதைத்தான் தெரிவிப்பர்' எனத் தெரிவித்தார்.

  லலித் பனோட்டின் கடிதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீரர், வீராங்கனைகள் கையொப்பமிட்ட கடிதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai