சுடச்சுட

  

  உலக குளிர்கால விளையாட்டு: ஜார்க்கண்ட் வீரர் தாஸ் பங்கேற்பு

  By dn  |   Published on : 22nd January 2013 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மனநலம் குன்றியவர்களுக்கான உலக குளிர்கால விளையாட்டுப் போட்டியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த துஷார் தாஸ் என்பவர் இந்திய குளிர்கால ஒலிம்பிக் அணி சார்பில் கலந்து கொள்கிறார்.

  இந்த விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் தலைநகர் பியாங் சாங்கில் அடுத்த மாதம் 29-ம் தேதி முதல் மார்ச் மாதம் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

  இந்தப் போட்டியில் பங்கேற்க ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  இவர், ஃப்ளோர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கிறார். இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை தில்லி பயணிக்கிறார்.

  பின் அங்கிருந்து இந்திய அணியுடன் தென் கொரியா புறப்பட உள்ளார்.

  "மனநலம் குன்றியவர்களுக்கான குளிர்கால விளையாட்டுப் போட்டி 1991-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

  இப்போட்டியில் ஏற்கெனவே 5 ஜார்க்கண்ட் தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போது ஆறாவது வீரராக தாஸ் பங்கேற்க உள்ளார்' என்று தாஸின் பயிற்சியாளரான அவதார் சிங் தெரிவித்தார்.

  இதற்கு முன்னர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் சர்மா (2001, தென் ஆப்பிரிக்கா), ராஜீவ் சிங் மற்றும் விஜய் மிஸ்ரா (2005, ஜப்பான்), அஷெல் கெüரவ் மற்றும் அல்பனா குமாரி (2009, தென் ஆப்பிரிக்கா) ஆகிய வீரர்கள் குளிர்கால விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai