சுடச்சுட

  

  சென்னை ஓபன் செஸ் நாராயணனுக்கு சர்வதேச மாஸ்டர் அந்தஸ்து

  By dn  |   Published on : 22nd January 2013 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  narayanan

  ஐந்தாவது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியின் 9 சுற்றுகள் முடிவில் கேரளத்தைச் சேர்ந்த எஸ்.எல்.நாராயணன் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்றார்.

  சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றும் வரும் இப்போட்டியின் 9ஆவது சுற்று திங்கள்கிழமை நடைபெற்றது. இச்சுற்றில், சீனாவைச் சேர்ந்த லு ஷாங்லேயுடன் (7 புள்ளிகள்) டிரா செய்ததன் மூலம் 14 வயது நிரம்பிய நாராயணன் (7 புள்ளிகள்) சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்றார்.

  இதன் மூலம் நாராயணன், தனது மூன்றாவது மற்றும் கடைசி சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்றார்.

  இவர், தனது முதல் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தை சென்னையில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் (2011) போட்டியிலும், 2-வது மாஸ்டர் அந்தஸ்தை காமன்வெல்த் சாம்பியன்ஷிப் (2012) போட்டியிலும் பெற்றார்.

  இப்போட்டியின் 9 சுற்றுகள் முடிவில் ஜெர்மனியின் ஹென்ரிக் டெஸ்கே 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து சீனாவின் வான் யுன்கெü, பல்கேரியாவின் அலெக்சன்ட்ரோவ் அலெக்செஸ், வங்கதேசத்தின் நியஸ் முர்ஷெத், இந்தியாவைச் சேர்ந்த லலித் பாபு, அதிபன் பாஸ்கரன் உள்ளிட்ட வீரர்கள் 7 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இப்போட்டியில் மேலும் இரு சுற்றுகள் நடைபெற உள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai