சுடச்சுட

  
  anand

  டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் 8 சுற்றுகள் முடிவில் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 5.5 புள்ளிகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார்.

  75-வது டாடா ஸ்டீல் செஸ் போட்டி நெதர்லாந்தின் வடக்கு ஹாலந்து மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 11-ம் தேதி தொடங்கிய இப்போட்டி வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

  இப்போட்டியின் 8-வது சுற்றில் ஹாலந்தின் இவான் சோகோலோவுடன் விஸ்வநாதன் ஆனந்த் மோதினார்.

  இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.  இதனால் ஆனந்த், 5.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

  மற்ற ஆட்டத்தில் நார்வேயின் மக்னெஸ் கார்ல்ùஸன் ரஷியாவின் செர்ஜி கர்ஜகினை வீழ்த்தினார். இதனால் 6 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தில் உள்ளார்.

  அமெரிக்காவின் ஹிகரு நகமூரா, ஆர்மேனியாவின் லிவோன் அரோனியன் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் உள்ளனர். இந்தியாவின் மற்றொரு வீரரான ஹரிகிருஷ்ணா 4.5 புள்ளிகள் பெற்றுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai