சுடச்சுட

  
  mduwin2

  தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாணவர் மற்றும் மாணவியர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.

  இப்போட்டி ஜனவரி முதல் வாரத்தில் தில்லியில் நடைபெற்றது. இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமமும், பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து இப்போட்டியை நடத்தியது. தமிழகத்திலிருந்து 53 மாணவ, மாணவியர் இப் போட்டியில் பங்கேற்றனர். டேபிள் டென்னிஸ் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மதுரை வி.கே.கே. பிளே குரூப்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.பாலகிருஷ்ணன் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.

  அதே பிரிவில் மகளிருக்கான போட்டியில் மதுரை ஜெயின் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்நேகா அங்கிதாவும் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். பதக்கம் பெற்ற மதுரை மாணவர் மற்றும் மாணவி ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளியையும், மாவட்ட உடற்கல்வி இயக்குநர் ஜே. பரமேஸ்வரி ஆகியோரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai