சுடச்சுட

  
  MUMBAI

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 44ஆவது முறையாக முன்னேறியுள்ளது மும்பை அணி.

  அரையிறுதி ஆட்டத்தில் சர்வீசஸ் அணியுடன் 39 முறை ரஞ்சிக் கோப்பையை வென்ற மும்பை அணி டிரா செய்தது. இருப்பினும், முதல் இன்னிங்ஸில் பெற்ற ரன்கள் அடிப்படையில் மும்பை அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

  தில்லியில் நடைபெற்ற இப்போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 454 ரன்கள் குவித்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் அகர்கர் 145 ரன்கள் எடுத்தார்.

  பின்னர் பேட் செய்த சர்வீசஸ் அணி 5ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. வழக்கமாக 5 நாள்கள் நடைபெறும் இந்த ஆட்டம் மழையின் காரணமாக 3 மற்றும் 4-ம் நாள் ஆட்டங்கள் நடைபெறவில்லை. அதனால் கூடுதலாக ஒரு நாள் விளையாடப்பட்டது.

  திங்கள்கிழமை 6-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்ட நேர இறுதிக்குள் சர்வீசஸ் அணியை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்துக்கு மும்பை அணி தள்ளப்பட்டது. அவ்வாறு நடக்காவிடில் டாஸ் செய்து, இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணி தேர்வு செய்யப்படும் சூழ்நிலை உருவானது.

  இத்தகைய நிலையில் ஆறாவது நாள் ஆட்டத்தை செளமியா ஸ்வைன் 64 ரன்களுடனும், யஷ்பால் சிங் 43 ரன்களுடனும் தொடங்கினர். அணியின் ஸ்கோர் 186ஆக உயர்ந்தபோது 58 ரன்கள் எடுத்திருந்த யஷ்பால் சிங் ஆட்டமிழந்தார். இதையடுத்து சர்வீசஸ் அணியின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததானது. மேலும் 54 ரன்களை எடுப்பதற்குள் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

  இதனால் 240 ரன்களுடன் அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இத்துடன் 6ஆவது நாள் ஆட்ட நேரமும் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸில் சர்வீசஸ் அணியை விட மும்பை அணி 214 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன் அடிப்படையில் அந்த அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

  மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தவான் குல்கர்னி 33 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். மற்றொரு பந்து வீச்சாளர் தாகூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மும்பை அணியின் கேப்டனாக உள்ள அஜீத் அகர்கர், 6 முறை ரஞ்சிக் கோப்பையை வென்ற மும்பை அணியில் இடம் பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

  இறுதிப்போட்டி: இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி, செளராஷ்டிர அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த ஆட்டம் வரும் 26 முதல் 30ஆம் தேதி வரை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai