சுடச்சுட

  

  பொதுநலன் சார்ந்த மனுவுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் விளையாட்டு அமைப்புகள் உரிய பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

  விளையாட்டு அமைப்புகள், தேசிய விளையாட்டு விதிமுறைகளில் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டிருப்பது தொடர்பாக வழக்குரைஞர் ராகுல் மெஹ்ரா பொது நலன் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் மற்றும் வி.கே. ஜெயின் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

  "பொது நல மனுக்களுக்கு விளையாட்டு அமைப்புகள் உரிய பதில் அளிக்க வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு மீதான அடுத்த விசாரணை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai