சுடச்சுட

  
  saina

  பாட்மிண்டன் தரவரிசையில் இந்த ஆண்டுக்குள் முதலிடத்தைப் பிடிப்பேன் என்று இந்திய வீராங்கனையான சாய்னா நெவால் தெரிவித்துள்ளார்.

  "இப்போது நான் இரண்டாம் இடத்தில் உள்ளேன். கடினமாக பயிற்சி மேற்கொண்டு இந்த ஆண்டு இறுதிக்குள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பேன் என்று தெரிவித்தார்.

  மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய்னா செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

  அவர் மேலும் கூறியதாவது:

  இந்த ஆண்டு சுமார் 15 முதல் 20 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும்;

  அதேசமயம், உலக சாம்பியன்ஷிப்போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை அளிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பதே எனது லட்சியம். அந்த இடத்தை விரைவில் அடைவேன். சீன வீராங்கனைகளுடன் விளையாடுவது சவாலானதாகும். இப்போது முதலிடத்தில் உள்ளவர் சீன வீராங்கனைதான். தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால்,முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்றார்.

  கடந்த ஆண்டு குறித்து அவர் கூறுகையில், மிகவும் சிறந்த ஆண்டு.

  5 போட்டிகளில் கோப்பையை வென்றதுடன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது சிறப்பானது. அதே போல் இந்த ஆண்டும் தொடரும் என்றார்.

  ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் மாதம் 5-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்க தனக்கு இன்னும் ஒருமாதம் இடைவெளி இருப்பதால் நன்கு பயிற்சி மேற்கொண்டு சிறப்பாக விளையாடுவேன் என்று தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai