சுடச்சுட

  

  இலங்கையுடன் கடைசி ஒருநாள் ஆட்டம்: கிளார்க் பங்கேற்பது சந்தேகம்

  By dn  |   Published on : 23rd January 2013 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலங்கை அணியுடனான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

  இரு அணிகளுக்கிடையேயான கடைசி ஒருநாள் போட்டி புதன்கிழமை நடைபெறுகிறது. 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4ஆவது ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் தொடரை கைப்பற்றும் அணி எது எனத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி புதன்கிழமை நடக்கிறது. முக்கியமான இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்குக்கு கணுக்காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இறுதி ஆட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. கணுக்கால் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் கிளார்க், உடல் தகுதி பெறுவாரா என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai