Enable Javscript for better performance
இளையோர் டென்னிஸ்: குரோஷிய வீரர் நினோ வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் ஜூனியர் டென்னிஸ் போட்டியில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஷஹில் தேஷ்முக், குரோஷியாவைச் சேர்ந்த நினோவிடம் தோல்வியடைந்தார்.

    இந்த ஆட்டத்தில் நினோ 7-6, 6-0 என்ற நேர் செட்களில் இந்தியாவைச் சேர்ந்த தேஷ்முக்கை வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்ற ஆட்டங்களில் பின்லாந்தைச் சேர்ந்த இரோ வாஸா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அர்யான் கோவீûஸ வீழ்த்தினார். திபெத்தைச் சேர்ந்த ஹோ ஜன் லீ 4-6, 6-0, 6-2 என்ற நேர் செட்களில் இந்தியாவைச் சேர்ந்த மகெந்துருவையும் வீழ்த்தினார்.

    மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்னேகாதேவி எஸ் ரெட்டி 6-1, 6-0 என்ற நேர் செட்களில் திபெத்தின் யு டிங் ஹெய்கை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான சிம்ரன் கெüர் சேதி 6-0, 6-1 என்ற நேர் செட்களில் சக நாட்டைச் சேர்ந்த இஸபெல்லா இஸ்மய்லோவாவை வீழ்த்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai