சுடச்சுட

  
  swapnil

  சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியின் 10-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் எஸ் தோபடேவிடம், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரஸின் அலெக்சாண்ட்ரோவ் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

  இந்த வெற்றியின் மூலம் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஸ்வப்னில் மூன்றாவது மற்றும் கடைசி கிராண்ட் மாஸ்டர்ஸ் நார்ம்ஸ் பெற்றார். ஸ்வப்னில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற அவர் 2500 புள்ளிகள் என்ற கட்டத்தைக் கடக்க வேண்டியுள்ளது.

  சென்னை நேரு மைதானத்தில் 5-வது சென்னை ஓபன் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் 10-வது சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  இச்சுற்றின் முடிவில் 6 வீரர்கள் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளனர். இவர்களில் மூன்று இந்தியர்களான கிராண்ட் மாஸ்ட்ர் அதிபன், எம்.ஆர். லலித் பாபு மற்றும் ஸ்வப்நில் ஆகியோரும் அடங்குவர். இவர்களைத் தவிர, கிராண்ட் மாஸ்டர்களான வங்கதேசத்தின் நியஸ் முர்ஷேத், சீனாவின் லு ஷாங்லே மற்றும் ரஷியாவின் ஆண்ட்ரேய் தேவியத்கின் ஆகியோரும் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

  இப்போட்டியின் 11-வது மற்றும் இறுதிச்சுற்று புதன்கிழமை நடைபெற உள்ளது. 8 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ள ஆறு பேரில் ஒருவர் சென்னை ஓபன் செஸ் பட்டத்தைக் கைப்பற்றுவார்.

  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா புதன்கிழமை மாலை 5 மணிக்கு நேரு மைதானத்தில் நடைபெற உள்ளது. வெற்றியாளர்களுக்கு ரூ. 10 லட்சம் ரொக்கம் பரிசாக அளிக்கப்பட உள்ளன. இப்போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 259 வீரர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai