சுடச்சுட

  

  துப்பாக்கி சுடும் பயிற்சியாளராக லாஸ்லோ சுக்சக் நியமனம்?

  By dn  |   Published on : 23rd January 2013 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய துப்பாக்கி சுடும் பயிற்சியாளராக ஹங்கேரியைச் சேர்ந்த லாஸ்லோ சுக்சக்கை நியமிக்க இந்திய விளையாட்டு ஆணையத்தின் அனுமதிக்காக காத்துள்ளது இந்திய தேசிய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் சங்கம்.

  ஜூனியர் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பயிற்சியளிக்க சுக்சக்கை நியமிக்க துப்பாக்கி சுடுவோர் சங்கம் பரிசீலினை செய்தது.

  "துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் பொறுப்பை தாம் ஏற்க வேண்டுமானால் சில நிபந்தனைகளை சுக்சக் விதித்தார். இந்த நிபந்தனைகளை இந்தியா விளையாட்டு ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம். இந்திய ஆணையம் சம்மதம் தெரிவித்தால் சுக்சக் துப்பாக்கி சுடும் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்' என்று தேசிய துப்பாக்கிச் சங்க செயலர் ராஜீவ் பாட்டியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

  சுக்சக்கின் நிபந்தனைகள் குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் இம்மாத இறுதிக்குள் முடிவெடுக்கும். அவர் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்படும் நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai