சுடச்சுட

  

  பாகிஸ்தானில் நான்கு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் ஏ அணியுடன் ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாட உள்ளது.

  கேப்டன் நெüரோஸ் மங்கள் தலைமையில் ஆப்கன் அணி இச்சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது.

  இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் இந்திஹாஃப் ஆஅலம் கூறுகையில், "ஆப்கன் அணியின் சுற்றுப்பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சுற்றுப்பயணம் அந்த அணி வீரர்களுக்கு சிறந்த பலனைத் தரும். 8 ஒருநாள் ஆட்டம் மற்றும் 4 இருபது ஓவர் ஆட்டங்களைத் தவிர இங்குள்ள தேசிய பயிற்சியாளர்களை அவ்வணி வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்றார்.

  பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட மேலும் நான்கு நாடுகளுடன் ஆலோசித்து வருகிறோம். இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

  ஆப்கன் அணியின் பயிற்சியாளர் கபீர் கான் கூறுகையில், இச்சுற்றுப்பயணம் ஆப்கன் வீரர்களின் திறமையை மேம்படுத்த உதவும். 2014-ல் நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற ஏதுவாக இச்சுற்றுப்பயணம் அமையும் என்று தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai